செப் 07 2014 |
|
01. | நீரை வணங்குவாயாக. நீரே உயிரின் சாரம். நீரின் அலைகளில் வாழ்வின் தாளம். கனியில் ருசியாய், மலரில் மணமாய், ஞாபகத்தில் நெகிழ்வாய், காமத்தின் நதியாய்.. நீரை அறிவாயாக... நீரின் தீராக் குழந்தைமையை வணங்குவாயாக. ஆகாயத்தை வணங்குவாயாக. நிறங்கள் சலனங் கொள்ளும் பிரபஞ்சக் கூரை அது. பறவைகளும் மேகங்களும் வசிக்கும் மெளனவெளி. ஆழத்தில் கோள்களும் இன்னும் ஆழத்தில் விண்மீன்களும் யாரும் ஆணையிடாமலே கடமை தவறாமல் சுழன்று நீந்திக் களிக்கும் மகா சமுத்திரம். நகர்தல் நதியின் தியானம். வளர்தல் செடியின் தியானம். சும்மாயிருத்தல் பாறையின் தியானம். நீரையும் நதியையும் பிரித்தறிதல் இயலாது. தியான மெளனத்தில் சலனமுறும் சுவாசமே உயிர்ப்புலம் என்றறிக..!! |
0 comments:
Post a Comment