நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே
பி.சுசீலா
இசை: கே.வி.மஹாதேவன்
பாடல்: கண்ணதாசன்
படம் : ஆதிபராசக்தி
நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு
நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு - கங்கை
நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு
கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு
கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சிதன்னில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு
கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சிதன்னில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு - கொடும்
கோலாட்சிதனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு
கொடும் கோலாட்சிதனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு
ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது
நீரோடும் பாதைதன்னைக் குறிக்கும்
ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது
நீரோடும் பாதைதன்னைக் குறிக்கும் - நிற்கும்
ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்
நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்
0 comments:
Post a Comment