கோமாதா எங்கள் குலமாதா
பி.சுசீலா குழுவினர்
இசை: கே.வி.மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
படம்: சரஸ்வதி சபதம்
குழு: கலை வாழ்க மலர் வாழ்க கலைமலரின் திரு வாழ்க
புலவர் திருநாவிற் பொருந்தும் தமிழ் வாழ்க !
கன்னித் தமிழோடு கலந்த நற்கவி வாழ்க
அன்னை கலைவாணி வண்ணப் பெயர் வாழ்க வாழ்கவே !
கோமாதா எங்கள் குலமாதா
குலமாதர் நலம் காக்கும் குணமாதா....(அ..அ...அ.....)
கோமாதா எங்கள் குலமாதா (2)
குலமாதர் நலம் காக்கும் குணமாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா
வண்ணக் கோமாதா..
கோமாதா எங்கள் குலமாதா
குலமாதர் நலம் காக்கும் குணமாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா
வண்ணக் கோமாதா..
கோமாதா
குழு: கோமாதா
எங்கள் குலமாதா
குழு: குலமாதா
பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே
பழகும் உறவிலே பிள்ளை நீயே
பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே
பழகும் உறவிலே பிள்ளை நீயே
கருணை மனதிலே கங்கை நீயே
கருணை மனதிலே கங்கை நீயே
கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெய்வம் நீயே
கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெய்வம் நீயே
கோமாதா எங்கள் குலமாதா
குலமாதர் நலம் காக்கும் குணமாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா
வண்ணக் கோமாதா..
கோமாதா
குழு: கோமாதா
எங்கள் குலமாதா
குழு: குலமாதா
இணங்காதோர் மனம் கூட இணங்கும்
நீ எதிர் வந்தால் எதிர்காலம் துலங்கும்
இணங்காதோர் மனம் கூட இணங்கும்
நீ எதிர் வந்தால் எதிர்காலம் துலங்கும்
வணங்காத...ஆ..... வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும்
வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும்
உன்னை வலம் வந்தால் நலம் எல்லாம் விளங்கும்
உன்னை வலம் வந்தால் நலம் எல்லாம் விளங்கும்
வண்ணக் கோமாதா...
கோமாதா எங்கள் குலமாதா
குலமாதர் நலம் காக்கும் குணமாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா
வண்ணக் கோமாதா..
கோமாதா
குழு: கோமாதா
எங்கள் குலமாதா
குழு: குலமாதா
குழு: நலம் நீயே...
பலம் நீயே..
குழு: நதி நீயே...
கடல் நீயே..
அருள் நீயே..
குழு:அருள் நீயே..
பொருள் நீயே..
குழு:பொருள் நீயே..
ஒளி நீயே..
குழு: ஒளி நீயே..
உயிர் நீயே..
குழு: உயிர் நீயே..
உலகம் யாவும் கருணையோடு பெருகி வாழ அருள்வாயே....
0 comments:
Post a Comment