Monday, December 5, 2011

என்னதான் ரகசியமோ இதயத்திலே...

என்னதான் ரகசியமோ இதயத்திலே
குரல் : சுசீலா
இசை : கே.வி.எம்
பாடல் : கண்ணதாசன்
படம் : இதயக் கமலம்
என்னதான் ரகசியமோ இதயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால்... எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால்... எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே
ஆஆஆ....

மலர்ப் பஞ்சணை மேலே உடல் பள்ளி கொள்ளாது
அது பள்ளி கொண்டாலும் துயில் கொள்ள விடாது
மலர்ப் பஞ்சணை மேலே உடல் பள்ளி கொள்ளாது
அது பள்ளி கொண்டாலும் துயில் கொள்ள விடாது
ஒரு நேரம் கூட ஆசை நெஞ்சம் அமைதி கொள்ளாது
அமைதி கொள்ளாது...நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே

விழி பார்க்கச் சொன்னாலும் மனம் பேசச் சொல்லாது
மனம் பேசச் சொன்னாலும் வாய் வார்த்தை வராது
அச்சம் பாதி ஆசை பாதி பெண் படும் பாடு
நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே.....
ஆஆஆ...
.
முதல் இரவு வந்ததும் இன்ப உறவு வந்ததும்
நீ அருகில் வந்ததும் நான் உருகி நின்றதும்
முதல் இரவு வந்ததும் இன்ப உறவு வந்ததும்
நீ அருகில் வந்ததும் நான் உருகி நின்றதும்
என் கன்னத்தின் மேல் கோலம் போட்டுத்
துடிக்க வைத்ததும்.. துடிக்க வைத்ததும்
நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே
 

0 comments:

Post a Comment