01. | --: ஆசிரியத்துறை :---
யானார்க்கும் யாவை யுமாய்னின்று காதலுமாய்
வானோர்க்கும் நற்கதியோ நல்கிலவே காமத்தால்
காணோர்க்கும் விந்தையாம் நீபொழிந்து
நானேற்கும் காதலுமே நீயணைந்தாய் என்னுள்ளே.
(வி-ம்) : வானவர்களுக்கெல்லாம் நற்பேறு காதலால் கிடைக்கவில்லை, நானாக எல்லாவற்றையுமாக என்னுள் நின்ற காதலும், காண்போர்க்கும் விந்தையாய் நீ பொழிந்து நான் உகந்து ஏற்க காதலால் என்னை நீயணைந்தாய்.. |
02. | ------:: கலி விருத்தம் ::-----
ஆகின்றாய் தாயாக நீசுமந்தே உன்கருவில்
ஆகின்றாய் இல்லானாய் நீகாத்து பேணியே
ஆகின்றாய் நல்லறிவு நாபுகட்டி ஆசானாய்
ஆகின்றாய் ஈடற்ற தெய்வமாய் எந்தாய்.
(வி-ம்) : உன் கருவில் எனை சுமந்து தாயாகிறாய், எனை பேணி நல்வழிகாத்து கோயில் வாழ் கடவுளாகிறாய் (இல்லான்+ஆனாய்= இல் - கோயில், இல்லான் - கோயில் வாழ்பவன் - கடவுள்), நல்லறிவு என் நாவிற்கு புகட்டி சிறந்த ஆசானாகிறாய், ஈடு இணையற்ற தெய்வமாகிறாய் என்னை ஈன்ற தாயே...!! குறிப்பு :: தாய் தெய்வத்தினும் மேலாணவள்.
|
03. | ------- :: கலி விருத்தம் :: -------
தேய்பொடி வெண்பூசி மேல்திலகம் திங்களென
காய்கதிர் வெம்மைசீர் கண்நுதலர் கால்கழலர்
மெய்யிடம் அம்மைசேர் ஆடும் நடமேயாம்
வாய்மொழிந் தோத சிவமே நமக.
(வி-ம்) தேகமெல்லாம் திருநீரு பூசி, திங்களாய் திலகமிட்டு, வெம்மை தாளாக் கதிரவன் கனலாய் நெற்றிக்கண்னும், ஒரு காலில் கழல் அணிந்தவனும், உடலில் இடபாகம் (மெய் + இடம்) அம்மைக்கு கொடுத்து நடனம் ஆடிடும் அவனை வாய் அழைக்குமே சிவமே நமக என (நமசிவாயம்).
குறிப்பு :: தாய் தெய்வத்தினும் மேலாணவள். |
04. | -----:: கலி விருத்தம் ::------
யாக்கை தொழுதுணர் யாவும் சிவமென
யாக்கை தொழுதுணர் யாவையும் புண்ணியமே
யாக்கை பிளந்து விளக்கேற்று சித்தியில்
யாக்கை அவனே யுணர்தலால் பேறு.
(வி-ம்) : தொழுதுணர்வாய் மனமே யாவும் உலகில் சிவமெனவே, அவன் படைப்பில் எல்லாம் சிறப்பு மிகுந்து புண்ணியமென உணர்வாய் மனமே, சித்தம் தெளிவுற மனமே உன்னை திறந்து அதில் ஒளியேற்றுக மனமே, அந்த ஈசன் தான் இந்த மனமென உணர்வதே வீடுபேறு ஆகுமே. |
05. | ----:: இன்னிசை வெண்பா ::----
யாருமறி வொண்ணா யெறியுரு வோனீசன்
யாமறி மாமலரோன், மாலோன் வணங்கிட
யாவரும் போற்றி இசைக்க அவன்னாமம்
வானுல கம்பெறு வார்.
(வி-ம்) : யாரும் அறியயிலாத பெரும் ஜோதி வடிவமாய் தீப்பிழம்பானவன் ஈசன், நாம் அறியக்கூடிய மலரில் வீற்றிருக்கும் மாலவனை வணங்கிடவும், யாவரும் அவன் நாமத்தை (ஓம் நமசிவாய) போற்றி இசைக்க சொர்க்கமடைவர். |
06. | ------- :: கலி விருத்தம் :: -------
தேய்பொடி வெண்பூசி மேல்திலகம் திங்களென
காய்கதிர் வெம்மைசீர் கண்நுதலர் கால்கழலர்
மெய்யிடம் அம்மைசேர் ஆடும் நடமேயாம்
வாய்மொழிந் தோத சிவமே நமக.
(வி-ம்) தேகமெல்லாம் திருநீரு பூசி, திங்களாய் திலகமிட்டு, வெம்மை தாளாக் கதிரவன் கனலாய் நெற்றிக்கண்னும், ஒரு காலில் கழல் அணிந்தவனும், உடலில் இடபாகம் (மெய் + இடம்) அம்மைக்கு கொடுத்து நடனம் ஆடிடும் அவனை வாய் அழைக்குமே சிவமே நமக என (நமசிவாயம்). |
07. | ----- (கலி விருத்தம்) ---
எவ்வழி யார்யாரும் யாக்கின் சிவனாரே
அவ்வழி யாக்கினன் யாவுமே ஞாலத்தே
அவ்வழி பேறடையும் யாக்கை விடுக்கும்கால்
அவ்வழி காட்டிடும் எந்தைதாள் சேர்.
(வி-ம் ) : எந்த வழி யார் யாரும் உண்டாக்கினும் அவ்வழி இப்புவிமீது உண்டாக்கியது சிவனே. அந்த வகையில் உடலைவித்து உயிர் துறக்கும் காலத்தே வீடு பேறு அடைந்து எந்தை சிவபெருமான் பாதம் சேர அவ்வழி காட்டிடும். |
08. | வான்சென்றோர் சென்றிலர் தோள்சுமந்தே செல்வமும்
தான்சேர்த்த யாவும் தரணியிலே - விட்டாரும்
தான்கொண்ட பற்றுதலும் வாழ்வதனில் செல்வத்தே
தான்செப்பும் கல்வியு மாம்.
(வி-ம்) :: இந்த உலகில் தான் சேர்த்த செல்வங்கள் யாவையும் தான் வானுலகம் செல்லும் போது தோல் சுமந்து செல்வார் இல்லை, எனவே வாழ்வில் செல்வத்தின் மீது தான் கொண்ட பற்றறுத்தவர்கள் பற்றின்றி வாழ நமக்களிக்கும் அறிவுரையும் அதுவே...! |
09. | -- கலி விருத்தம் --
வல்லோன் இறைதொழுவோர் ஞாலம் நிலைப்பரே
நல்லோன் புகழ்பாடி நாளும் தொழுவாரே
இல்லான் வலியோ னிலையே அவன்முன்னே
எல்லாம் அவனேயாம் வையத்து வாழ்வு.
|
10. | -- கலி விருத்தம் --
ஆயின் பறந்தாழ்ந்தே நாணிக் குறுகினரே
வாயின் மொழியலரா பேதமை யாகினரே
தாயின் உளமாகும் அம்மையும் அப்பனாய்
சேயின் உளங்கானும் ஈசனாம் எந்தை.
|
11. | -- கலிவிருத்தம் --
விந்தை யவனாகி யானான் உலகளந்து
விந்தை யெதுவாயின் யாவும் அவன்வினை
விந்தை உலகின் விருட்சமாய் வித்தகமாய்
எந்தை சிவனாரே ஞாலச் சுழற்சி.
|
12. | --- கலிவிருத்தம் ---
மதமாய் மதம்பிடித்து மாய்வராம் மாக்கள்
மதமாய் மதமேய்த்து வேடம் புனைந்து
மதமாய் மதம்விலக்கி நேசம் வளர்க்க
மதமொன் றதுவூம் மனிதம் அதுவாம்.
|
13. | -- கலிவிருத்தம் --
விண்ணை அளப்பறியா ஞானக் கொழிந்தினை
எண்ண அளப்பறியா எந்தை சிவனடியை
கண்ணை திறந்திடுமே ஞானச் சுடரோனை
தன்னில் நிறுத்தியே பேறூகொள்ளும் வீடு.
|
14. | காடு உறையுள்; உடுப்பர் உரிதோலும்;
ஊர்வ துவுவிடை; வெய்பொடி தேகம்பூசி;
பாடு இறைவன் சிவன்பால் இசைந்து
பிறைநுதல் மாதர் உமையெனும் நங்கையை
பாடப் பிணைவான் அறைகழல் பண்ணே
அடிநீழல் ஆணை பணிந்து தொழுதிட
நாடாப் பெருவீடு நல்கிடுமே நல்கிலவே
மீண்டுமாம் இப்பிறவி நாடி நமையே.
(வி-ம்) : சுடிகாடு இருப்பிடம், உடுத்திக்கொள்வது புலித்தோல், எருது அவன் வாகனம், வெண்ணிற சாம்பலை உடலெங்கும் பூசிக்கொள்ளும் சிவனின் மீது மனமிசைந்து அவனைப் பாட பிறையை நுதலாக கொண்ட மாதரசி உமையாளுடன் அவன் அறைகழல் பண்ணிசைக்க சேர்வானை அடிதனை தொழுது பணிந்திட கிடைக்க பெறாத அவனின் வீடுபேறு கிடைக்குமே, அவ்வாறு இல்லையெனில் மீண்டும் நாம் இப்பிறவியையே அடைய நேரிடும்.
|
15. | .........:: பஃறொடை வெண்பா ::........
வையத்து வாழ்வித்தே வாழ்வாரை வாழ்த்துமே
வேயத்து வீடாமோ யாவர்க்கும் கைலாயம்
தேயத்தே சிந்திப்பான் ஈசனையே பாதஞ்சேர்
வானோர்க்கும் கிட்டியதே ஞாலத்தே பேறதுவும்
எந்தை மலர்ப்பாதம் சேர்ந்தார்க்கும் மேலாகும்
பண்ணார் பலப்பாடி பாட்டுடனே போற்றுவமே
பண்ணாய் அவற்றாள் தொழ
|
| தொடரும் இன்னும் ஐந்துப்பாக்கள்....
|