வள்ளுவம் தந்த குறள்...

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Wednesday, January 22, 2014

வாழ்வின் தேடல்கள்

JAN
01
2014

வாழ்வின் தேடல்கள்

வாழ்வின் தேடல்கள்
எல்லாம்
வாழ்வில் கலந்திருக்கும்,

தேடலின் பசியிருக்க
வேள்வியில் வேட்க்கையிருக்கும்,

நாட்கள் ஓடிவிட்டதாய்
எண்ணாமல்,
நாட்களோடு ஓடுவதாய்
எண்ணம் கொள்..!

புதிதாய் தேடு
புதியவைக் காண்
புதிதாய் புணர்
புதிதாய் உணர்
புதிதாய் கொள்
புதிதாய் பயில்

உதிர்ந்துதான் போகிறது
நிமிடங்களும், நாட்களும்
பதிந்து தான் கிடக்கிறது
அதன் அணைத்து சுவடுகளும்,
சுவடுகளின் வடுக்களில்
சுகம் மட்டும் எடு, மகிழ்...

ஒருமுறை உணர்வுகொள்
ஒருமுறை கிளர்ந்தெழு
ஒருமுறை எல்லைத்தாண்டு
ஒருமுறை விழை
உலகத்தில் நீ
எல்லை கடந்திருப்பாய்
அப்போது உணர்வாய்
பிரபஞ்சம் உன்
காலின் கீழ்
வேண்டுவதோ உன்
கையின் மேல்...!

எதார்த்தத்தின்
அர்த்தம் விளங்கும்
அர்த்தப்படும்
ஒவ்வொரு நிமிடங்களும்
எதார்த்தமாகும்...!
வாழ்க்கை உனதாகும்,
உன் வாழ்வை நீ
வாழ்ந்து பார்
அது உனக்கானது...

தடைகள் தாண்டு
உயரம் தொடுவாய்..!
சிகரம் தொட
பிறந்திருக்கிறாய்

உதிர்தல் கிளர்கிறது
புதிதாய் புதுவருடம்
கிளர்ந்தெழு,
பிறக்கும் பதுவருடத்துள்
பிறந்திடு புதிதாய்
புணர்ந்திடு புதுவாழ்வு...!

உன் வர்ணம் தீட்ட
அதோ வானம்
தூரிகைக் கொண்டு வா
உன்னை வண்ணம் செய்
உலகு அடையாளம் கொடுக்கும்
அங்கிகாரம் கிடைக்கும்...!

கவிஞர்.கவின்முருகு
01/01/2014

விழி மூடாமல் சுகம் சேர்க்க வந்தாயடி

JAN
20
2014

விழி மூடாமல் சுகம் சேர்க்க வந்தாயடி

விழி மூடாமல் சுகம் சேர்க்க வந்தாயடி
குளிர் மழையாகி உடல் நனைத்து சென்றாயடி
நான் கண்மூட மடிதாங்கி தாயானாயடி
தலைகோதும் விரல் தேடி தொலைந்தேனடி
உயிரே... என்னழகே... வாவா..!!!!

கவிஞர்.கவின்முருகு
20/01/2014

"கணவா...! கனவா???

JAN
20
2014

கணவா...! கனவா???

ஒவ்வொரு இரவும்
உன் இலக்கு நோக்கியே நகர்கிறது..!
நீ வெல்ல நான் தோற்கும்,
இலக்கணம் மாறா
உண்ணதம் வாழ்வியல்,
இரவுகளில் நீட்சியில்
விளங்கிவிடுகிறது...!
வாழ்வை வாழ விழைகிறேனடா..!
கணவா...! கனவா???

மின்சாரம் என்மீது பாய்கின்றதே...!

JAN
20
2014

மின்சாரம் என்மீது பாய்கின்றதே...!

உன் விரலுக்கு மட்டுமே
இவ்வளவு சக்தியிருக்க,
உன் மனதுக்கு
எவ்வளவு சக்தியிருக்கும்??
உன் விரல் தீண்ட
மின்சாரம் என்மீது பாய்கின்றதே...!

கவிஞர்.கவின்முருகு
20/01/2014

அதுவும் ஏனோ..??

JAN
20
2014

அதுவும் ஏனோ..??

எல்லா இரவுகளும்
கழிந்து கொண்டே போகிறது
இதில்
உனக்கும், எனக்குமான
அந்த நிமிடங்களும்
காணாமல் போகிறதே
அதுவும் ஏனோ..??

- கவின்முருகு

கவிஞர்.கவின்முருகு
20/01/2014

பெண் ஒரு நிறப்பிரிகை...!

JAN
20
2014

பெண் ஒரு நிறப்பிரிகை...!

"பெண் ஒரு நிறப்பிரிகை
எவ்வளவு அடர்த்தி கூடிய
வெள்ளொளி உள் வாங்கினும்
ஆண் மகனை
நிறம் பிரித்தே
பார்க்கும்
பார்க்க வைக்கும்...!"

கவிஞர்.கவின்முருகு
20/01/2014

நீதானே பால் வார்த்த கார்மேகம் ...!

JAN
20
2014

நீதானே பால் வார்த்த கார்மேகம் ...!

என்
ஒவ்வொரு நிமிடங்களையும்
உனக்காகவே சேமிக்கிறேன்..!

என் வாழ்வின்
அந்த
அர்த்தமற்ற நாட்களை
அறுத்தெறிந்துவிட்டேன்
உன்னோடு
அர்த்தப்பிடுத்திக்கொள்ள..!

நீ மட்டுமே உண்டாக்கிய
அந்த உண்ணத
அழகிய காதலை
என்னுள் விதைத்து
பூக்கச்செய்கிறேன்

நீதானே பால் வார்த்த கார்மேகம் ...!

கவிஞர்.கவின்முருகு
20/01/2014