வள்ளுவம் தந்த குறள்...

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday, December 20, 2011

கண்ணதாசா...!

கண்ணதாசா...!
நீயோரு காலக்கணிகை,
கருபடு பொருளை உருபட செய்தாய்,

கற்பனை நதியில் மூழ்கித்திலைத்தாய்,
கண்ணுக்குள் கனவுகள் தந்தாய், - அதில்
நெஞ்சோடு காதல் விளைத்தாய்.

கருத்தும் அறிவும் கணியத்தந்தாய்,
கற்பனைதந்தாய் கவிதை சமைத்தாய்,
காவியக் கதிர் விதைத்தாய்.

நாத்தீகம், ஆத்தீகம் படித்தாய்,
தத்தைகளோடு ததும்பி வாழ்வுகண்டாய்,
தாரம் கொண்டாய், தரணி வென்றாய்,

தங்கக்கோப்பையில் ரசம் உண்டாய்
தங்கதாரகைகளில் ரசம் கண்டாய்,
சுவைத்தாய், சுவைக்க பாடல் தந்தாய்.

கவிச்சக்கரவர்த்தி, மகாகவி, அடுத்து நீ,
"கவியரசு" என வந்தாய், அரசாண்டாய்,
காவிய ஏட்டில் கச்சிதமாய் நின்றாய்.

ஞானியாய், கவிஞானியாய் வந்து,
காலம் வென்றாய், மதக்காவியம் தந்தாய்.
"அர்த்தமுள்ள இந்து மத"க்காவியம் தந்தாய்.



July 20, 2010 at 7:09pm 

Monday, December 5, 2011

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே


உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
குரல்: டி.எம்.எஸ்
இசை:
பாடல்: கண்ணதாசன்
படம்: அருணோதயம்

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி - உன்
மனசப் பாத்துக்க நல்லபடி

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி - உன்
மனசப் பாத்துக்க நல்லபடி

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...

கதைகட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு
காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு
கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி
குணத்துக்கு தேவை மனசாட்சி
உன் குணத்துக்கு தேவை மனசாட்சி

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...

மயிலை பார்த்து கரடி யென்பான்
மானை பார்த்து வேங்கை என்பான்
குயிலை பார்த்து ஆந்தை யென்பான்
அதையும் சில பேர் உண்மையென்பார்
யானையைப் பார்த்த குருடனை போல்
என்னை பார்த்தால் என்ன செய்வேன்
சிலர் என்னை பார்த்தால் என்ன செய்வேன்

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...

கடலில் விழுந்த நண்பனுக்கு
கை கொடுத்தேன் அவன் கரையேற
கரைக்கு அவனும் வந்து விட்டான்
கடலில் நாந்தான் விழுந்து விட்டேன்
சொல்லி அழுதால் தீர்ந்துவிடும்
சொல்ல தானே வார்த்தையில்லை
அதை சொல்ல தானே வார்த்தையில்லை

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி - உன்
மனசப் பாத்துக்க நல்லபடி

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...


சொன்னது நீதானா


சொன்னது நீதானா
குரல்: பி.சுசீலா
இசை : எம்.எஸ்.விஸ்வனாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
படம் : நெஞ்சில் ஓர் ஆலயம்

சொன்னது நீதானா.... சொல் சொல் சொல் என்னுயிரே
சொன்னது நீதானா.... சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா.....சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
சொன்னது நீதானா.... சொல் சொல் சொல் என்னுயிரே

இன்னொரு கைகளிலே நான் யார் யார் நானா
எனை மறந்தாயா ? ஏன் ஏன் ஏன் என்னுயிரே
சொன்னது நீதானா.... சொல் சொல் சொல் என்னுயிரே

மங்கள மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
இறுதி வரை துணையிருப்பேன் என்றதும் நீதானே - இன்று
சொன்னது நீதானா.... சொல் சொல் சொல் என்னுயிரே

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா
சொன்னது நீதானா.... சொல் சொல் சொல் என்னுயிரே

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு


ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
குரல் : பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி
பாடல்: கண்ணதாசன்
படம் : காவியத் தலைவி

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா
கண்மணி சுகமா சொல் என்றாள்
கண்மணி சுகமா சொல் என்றாள்

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்

குங்குமம் இருந்தது நெற்றியிலே
சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
குங்குமம் இருந்தது நெற்றியிலே
சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
தங்கம் போன்ற இதழ்களிலே
ஒரு தயக்கம் பிறந்தது வார்த்தையிலே
தயக்கம் பிறந்தது வார்த்தையிலே

என்னுயிர்த் தாயே நீயும் சுகமா
என்னுயிர்த் தாயே நீயும் சுகமா
இருப்பது எங்கே சொல் என்றேன்
அன்னை முகமோ காண்பது நிஜமோ
கனவோ நனவோ சொல் என்றேண்
கனவோ நனவோ சொல் என்றேன்

கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா
என் கண்மணி சுகமா சொல் என்றேன்
(வசனம்)
கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா
கண்மணி சுகமா சொல் என்றேன்
கண்மணி சுகமா சொல் என்றேன்

வானத்திலிருந்தே பாடுகிறேன்
எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
வானத்திலிருந்தே பாடுகிறேன்
எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
மகளே வாழ்கென வாழ்த்துகிறேன்
நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்


ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்...


ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
பி.சுசீலா, பி.பி.ஸ்ரீனிவாஸ்
இசை: கே.வி.மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
படம்: சாரதா

பெண்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன?
ஆண்: காதல்
பெண்: அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால் அந்த உரிமைக்கு பெயர் என்ன?
ஆண்: குடும்பம்
பெண்: நினைத்தவன் அவளை மறந்து விட்டால் அந்த நிலமையின் முடிவென்ன?
ஆண்: துயரம்
பெண்: பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால் அங்கு பெண்மையின் நிலை என்ன?
ஆண்: மௌனம்
பெண்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன?
ஆண்: காதல்

பெண்: இரவும் பகலும் உன் உருவம் அதில் இங்கும் அங்கும் உன் உருவம்
இரவும் பகலும் உன் உருவம் அதில் இங்கும் அங்கும் உன் உருவம்
ஆண்: அடக்கம் என்பது பெண் உருவம் அதை அறிந்தால் மறையும் என் உருவம்
அடக்கம் என்பது பெண் உருவம் அதை அறிந்தால் மறையும் என் உருவம்

பெண்: மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை
மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை
ஆண்: நினைக்கும் நிலையிலும் நான் இல்லை உன்னை நெருங்கும் தகுதியும் எனக்கில்லை

பெண்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன?
ஆண்: காதல்

பெண்: கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை கேலி செய்தால் மனம் பொறுக்கவில்லை
கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை கேலி செய்தால் மனம் பொறுக்கவில்லை
ஆண்: வாதம் செய்வது என் கடமை அதில் வழியைக் காண்பது உன் திறமை
வாதம் செய்வது என் கடமை அதில் வழியைக் காண்பது உன் திறமை
பெண்: கண்டேன் கண்டது நல்ல வழி அது காதலன் உடனே செல்லும் வழி
கண்டேன் கண்டது நல்ல வழி அது காதலன் உடனே செல்லும் வழி
ஆண்: சொன்னேன் பல முறை யாசிக்கிறாய் நீ சொன்னதை நானும் யோசிக்கிறேன்
சொன்னேன் பல முறை யாசிக்கிறாய் நீ சொன்னதை நானும் யோசிக்கிறேன்

பெண்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன?
ஆண்: காதல்

நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே

நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே 
பி.சுசீலா 
இசை: கே.வி.மஹாதேவன் 
பாடல்: கண்ணதாசன் 
படம் : ஆதிபராசக்தி 

நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே 
மீனாட்சி என்ற பெயர் எனக்கு 
நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே 
மீனாட்சி என்ற பெயர் எனக்கு - கங்கை 
நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில் 
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு 
கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில் 
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு
கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சிதன்னில் 
காமாட்சி என்ற பெயர் எனக்கு 
கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சிதன்னில் 
காமாட்சி என்ற பெயர் எனக்கு - கொடும் 
கோலாட்சிதனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர் 
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு 
கொடும் கோலாட்சிதனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர் 
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு

ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது 
நீரோடும் பாதைதன்னைக் குறிக்கும் 
ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது 
நீரோடும் பாதைதன்னைக் குறிக்கும் - நிற்கும் 
ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி 
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும் 
நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி 
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும் 
 

மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம்...


மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம்
பி.சுசீலா
இசை: கே.வி.மஹாடதேவன்
பாடல்: கண்ணதாசன்
படம் : மஹாகவி காளிதாஸ்

மலரும் வான் நிலவும்
சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே  (மலரும் - 4 வரிகள்)

கனவில் தோன்றி சிரித்து சிரித்து
நான் காணும் இடமெங்கும் இருக்கின்றாய்
கனவில் தோன்றி சிரித்து சிரித்து
நான் காணும் இடமெங்கும் இருக்கின்றாய்
கனியில் ரசமாய் இனித்து இனித்து
என் கையில் கிடைக்காமல் மறைகின்றாய்
கனியில் ரசமாய் இனித்து இனித்து
என் கையில் கிடைக்காமல் மறைகின்றாய்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்..             (மலரும் - 4 வரிகள்)

மனதில் கவிதை வரைந்து வரைந்து
என்னை மயங்கச் செய்வதும் கேளிக்கையோ
மனதில் கவிதை வரைந்து வரைந்து
என்னை மயங்கச் செய்வதும் கேளிக்கையோ
தனிமைத் துயரில் தவிக்கத் தவிக்க
என் தலைவா உனக்கிது வேடிக்கையோ
தனிமைத் துயரில் தவிக்கத் தவிக்க
என் தலைவா உனக்கிது வேடிக்கையோ
தலைவா உனக்கிது வேடிக்கையோ            (மலரும் - 4 வரிகள்)


கோமாதா எங்கள் குலமாதா...


கோமாதா எங்கள் குலமாதா
பி.சுசீலா குழுவினர்
இசை: கே.வி.மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
படம்: சரஸ்வதி சபதம்

குழு: கலை வாழ்க மலர் வாழ்க கலைமலரின் திரு வாழ்க
புலவர் திருநாவிற் பொருந்தும் தமிழ் வாழ்க !
கன்னித் தமிழோடு கலந்த நற்கவி வாழ்க
அன்னை கலைவாணி வண்ணப் பெயர் வாழ்க வாழ்கவே !

கோமாதா எங்கள் குலமாதா
குலமாதர் நலம் காக்கும் குணமாதா....(அ..அ...அ.....)

கோமாதா எங்கள் குலமாதா (2)
குலமாதர் நலம் காக்கும் குணமாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா
வண்ணக் கோமாதா..

கோமாதா எங்கள் குலமாதா
குலமாதர் நலம் காக்கும் குணமாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா
வண்ணக் கோமாதா..
கோமாதா
குழு: கோமாதா
எங்கள் குலமாதா
குழு: குலமாதா

பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே
பழகும் உறவிலே பிள்ளை நீயே
பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே
பழகும் உறவிலே பிள்ளை நீயே
கருணை மனதிலே கங்கை நீயே
கருணை மனதிலே கங்கை நீயே
கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெய்வம் நீயே
கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெய்வம் நீயே

கோமாதா எங்கள் குலமாதா
குலமாதர் நலம் காக்கும் குணமாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா
வண்ணக் கோமாதா..
கோமாதா
குழு: கோமாதா
எங்கள் குலமாதா
குழு: குலமாதா

இணங்காதோர் மனம் கூட இணங்கும்
நீ எதிர் வந்தால் எதிர்காலம் துலங்கும்
இணங்காதோர் மனம் கூட இணங்கும்
நீ எதிர் வந்தால் எதிர்காலம் துலங்கும்
வணங்காத...ஆ..... வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும்
வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும்
உன்னை வலம் வந்தால் நலம் எல்லாம் விளங்கும்
உன்னை வலம் வந்தால் நலம் எல்லாம் விளங்கும்
வண்ணக் கோமாதா...

கோமாதா எங்கள் குலமாதா
குலமாதர் நலம் காக்கும் குணமாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா
வண்ணக் கோமாதா..
கோமாதா
குழு: கோமாதா
எங்கள் குலமாதா
குழு: குலமாதா

குழு: நலம் நீயே...
பலம் நீயே..
குழு: நதி நீயே...
கடல் நீயே..
அருள் நீயே..
குழு:அருள் நீயே..
பொருள் நீயே..
குழு:பொருள் நீயே..
ஒளி நீயே..
குழு: ஒளி நீயே..
உயிர் நீயே..
குழு: உயிர் நீயே..
உலகம் யாவும் கருணையோடு பெருகி வாழ அருள்வாயே....

என்னதான் ரகசியமோ இதயத்திலே...

என்னதான் ரகசியமோ இதயத்திலே
குரல் : சுசீலா
இசை : கே.வி.எம்
பாடல் : கண்ணதாசன்
படம் : இதயக் கமலம்
என்னதான் ரகசியமோ இதயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால்... எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால்... எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே
ஆஆஆ....

மலர்ப் பஞ்சணை மேலே உடல் பள்ளி கொள்ளாது
அது பள்ளி கொண்டாலும் துயில் கொள்ள விடாது
மலர்ப் பஞ்சணை மேலே உடல் பள்ளி கொள்ளாது
அது பள்ளி கொண்டாலும் துயில் கொள்ள விடாது
ஒரு நேரம் கூட ஆசை நெஞ்சம் அமைதி கொள்ளாது
அமைதி கொள்ளாது...நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே

விழி பார்க்கச் சொன்னாலும் மனம் பேசச் சொல்லாது
மனம் பேசச் சொன்னாலும் வாய் வார்த்தை வராது
அச்சம் பாதி ஆசை பாதி பெண் படும் பாடு
நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே.....
ஆஆஆ...
.
முதல் இரவு வந்ததும் இன்ப உறவு வந்ததும்
நீ அருகில் வந்ததும் நான் உருகி நின்றதும்
முதல் இரவு வந்ததும் இன்ப உறவு வந்ததும்
நீ அருகில் வந்ததும் நான் உருகி நின்றதும்
என் கன்னத்தின் மேல் கோலம் போட்டுத்
துடிக்க வைத்ததும்.. துடிக்க வைத்ததும்
நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே
 

Sunday, December 4, 2011

யானோர் காலக் கணிதம்


>நான் வேண்டும் உயிராக என்றென்றும்...

 

DEC
26
2010

 

நான் வேண்டும் உயிராக என்றென்றும்...


  கருத்துக்குள் கருவாகி,
காலங்கள் பலத்தாண்டி,
சிந்தையுள் சீராய்,
பல கருத்து பகிர்ந்தனன் நான்...!!

கவர் கள்வன் இவனெனவே
காலம் பகிர்தனன் நானாய்,
கறுகிய பூவாய் என்னில்
கணத்த இதயம்..!

நீயாவாய் நிஜமாவாய்,
உனதாவாய் எனதுயிரே,
உலகாளும் நாயகியாய்,
நான்காணும் என்னவளாய்,

இதயத்தின் இரும்பொறையும்
இளகாத மனத்திரையும்..
இனியவளே உனதாக
நான் வேண்டும் உயிராக என்றென்றும்...!

கவிஞர்.கவின்முருகு
26/12/2010